தமிழ்நாடு

சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரணதண்டனை! மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இது மிகவும் கொடூரமானது, காரணங்கள் இன்றி அவர்களை கொலை செய்து இருக்கிறார்கள், மனிதாபிமானம், மனித நாகரீகமற்றது

மாலை முரசு செய்தி குழு

சாத்தான் குளம் தந்தை மகன் கொலைவழக்கில் கைதான 9 போலீசாருக்கும் இன்று மரணதண்டனை விதித்துள்ளது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரணதண்டனையோடு 15 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய தீர்ப்பாக இது பார்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நீதிபதி இந்த வழக்கினை பற்றி பேசுகின்ற போது, இது மிகவும் கொடூரமானது, காரணங்கள் இன்றி அவர்களை கொலை செய்து இருக்கிறார்கள், மனிதாபிமானம், மனித நாகரீகமற்றது என்பது போன்ற வார்த்தைகளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். மரணதண்டனை விதிப்பது தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இரவு எந்த ஒரு கடையையும் திறந்து வைத்திருக்க கூடாது என்று அரசு தடை விதித்திருந்தது. அச்சமயத்தில், தந்தை மகனான, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தங்களது எலக்ட்ரானிக் கடையை சிறிது நேரம் திறந்து வைத்துள்ளனர். அவ்வழியாக வந்த காவல்துறையினர், கடையினை மூட சொல்ல, அது பிரச்சனையாக வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாக 2020ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடை மூடும் நேரத்திற்குப் பிறகும் தங்களது எலக்ட்ரானிக் கடையைத் திறந்து வைத்திருந்தது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து , 58 வயதான பி. ஜெயராஜ் மற்றும் 31 வயதான ஜே. பென்னிக்ஸ் ஆகியோர் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவல்களிலிருந்து இந்த சம்பவங்கள் தொடங்கியது.

அதன் பிறகு தந்தைமகன் இருவரும் காவல்துறையினரால் அடித்து கொலைப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை காவல் மரணமாக எடுத்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் கடந்த மார்ச் 23 தேதி அந்த 9 குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் "இது கொலைதான்" என்று தீர்ப்பளித்துள்ளார். போலீசார்தான் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர், அதனால் இது கொலைதான் என்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தந்தை-மகன் கொலை வழக்கில் 9 காவலர்களையும் குற்றவாளிகளே என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் நீதி வழங்கியுள்ளார்.தற்போது அந்த 9 பேருக்கும் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.