தமிழ்நாடு

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் காமராஜர் பல்கலைகழகத்தின் 55 வது பட்டமளிப்பு விழா!

Malaimurasu Seithigal TV

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55 வது பட்டமளிப்பு விழா  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 531 மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் பெறுகிறார்கள். அவர்களில் ஒரு லடசத்து 33 ஆயிரத்து 783 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அதேபோல் பருவத்தேர்வு முறையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

602 பேருக்கு முனைவர் பட்டமும், ஒருவருக்கு இலக்கிய முனைவர் பட்டமும், 2 பேருக்கு அறிவியல் முனைவர் பட்டத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறி கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும், குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.