kinder garten Admin
தமிழ்நாடு

“பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்”- நான்கு வயது குழந்தையை இழந்து.. துயரத்தில் ஆழ்ந்த பெற்றோர்!

இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவரின் நான்கு வயது மகளான சிறுமி ஆருத்ரா

Mahalakshmi Somasundaram

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அமுதன் இவருக்கு திருமணமாகி  ஒரு மகன் ஒரு மகள் என, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவரின் நான்கு வயது  மகளான சிறுமி ஆருத்ரா. கேகே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலை பள்ளியில், பயின்று வருகிறார். வழக்கம் போல் இன்றும் சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளியில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த  சிறுமி ஆருத்ரா எதிர்பாராத விதமாக பள்ளியில் உள்ள, முறையாக மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கி உள்ளார்.

இதனை அறிந்த ஆசிரியர்களும், பள்ளியில் இருந்த மற்றவர்களும் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அண்ணா நகர் போலீசார், பள்ளி தாளாளர் உட்பட நான்கு ஆசிரியர்களையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இச்சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட  கோட்டாட்சியர் ஷாலினி தனியார் பள்ளிக்கு சீல் வைத்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்