தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத் திருவிழா...குவிந்த பக்தர்கள்!

Tamil Selvi Selvakumar

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தை தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

தை தெப்பத்திருவிழா :

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் தை தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தெப்பத் திருவிழா, கடந்த மாதம்,  24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் 
அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் தனித் தனியாக எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். 

இந்நிலையில்  11-ம் நாள் விழாவை ஒட்டி, நேற்று  கதிரறுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை மீனாட்சி அம்மனும்,  சுந்தரேசுவரர் சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, உப கோயிலான மாரியம்மன் தெப்பக்குளம் வந்தடைந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வண்டியூர் தெப்பத்தில், மீனாட்சி அம்மனும்,  சுந்தரேசுவரர் சுவாமியும் எழுந்தருளி இரண்டு முறை  தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.