மதுரையில் செங்கோட்டையனுக்கு அதிமுகவின்கழக பொதுச் செயலாளர் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
மதுரை நகரின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் கே.ஏ செங்கோட்டையன் அவர்களுக்கு Y+ பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி எனஅஇஅதிமுக மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி செயலாளர் ஜி.எஸ் செந்தில்நாதன் போஸ்டரை பெயரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளார்.
அதிமுகவில் சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டியனுக்கும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் இப்படி ஓர் போஸ்டர் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்