மதுரையில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை சீருடைக்காக, ஆண் டெய்லர்களை பயன்படுத்தி தன்னை கட்டாயபடுத்தி, அளவெடுக்க வைத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்த மதுரை, மாநகர அனைத்து மகளிர் காவல்துறையினர்.
மதுரை மாநகர், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார், மெட்ரிகுலேசன் பள்ளியில், மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின், சார்பில் ஒரு ஆண் மற்றும் பெண் டெய்லரை அழைத்துவந்து சீருடைகளுக்கான,அளவுஎடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: விஜய் நடத்திய "closed-door" மீட்டிங்.. வருடிக் கொடுத்தது போதும்.. இனி "அவர்களையும்" வச்சு செய்ய முடிவு!? Scene-னே மாறுதா?
அப்போது 10 ஆம் வகுப்பு படிக்கும், மாணவி ஒருவர்.மாணவிகளுக்கு எதற்கு ஆண் டெய்லர் மூலமாக அளவெடுக்க அனுமதிக்கிறீர்கள்? என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் ஆண் டெய்லர் அளவு எடுத்தால் தன்னால் அளவு எடுக்க முடியாது என ஆசிரியையிடம் கூறியதாகவும் ,ஆனாலும் ஆசிரியை கட்டாயமாக அளவு எடுத்துதான், ஆக வேண்டும் என மாணவியிடம் கூறியுள்ளார்.
அப்போது தான் அடுத்தாண்டு இந்த பள்ளியில் படிக்க போவதில்லை, ஏன் எனக்கு அளவு எடுக்க வேண்டும். என கூறியதாகவும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போதும் Just Freeயா எடுத்துக்கோ என மாணவியிடம் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: மாட்டிக்கிட்ட பங்கு! "என்ன விட்டு அவ கூட Honey Moon போயிட்டு வரையாடா" கோவை விமான நிலையத்தை அலறவைத்த பெண்
இதனையடுத்தும் ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும் போது தனது அனுமதியின்றி உடல் பாகங்களை தொட்டதால் ஆசிரியை மீதும், டெய்லர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10 ஆம் வகுப்பு மாணவி புகார்.
மதுரை நகர ,அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், அளித்த புகாரின் கீழ் ஆசிரியை மற்றும் இரண்டு டெய்லர்கள், மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனை அறிந்த தேசிய மாணவர் அமைப்பு, மற்றும் மகளிர் அமைப்பினர், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்