தமிழ்நாடு

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபர் கைது...

திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

 ஊத்துக்குளி காவல்நிலைய பகுதியில், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் ஈஸ்வரி என்ற மளிகை கடையில் சோதனை செய்ததில் கடையில் இருந்து 7 ஆயிரத்து 616 பாக்கெட் குட்காவும், 6 ஆயிரத்து 640 கஞ்சா கலந்த சாக்லெட் பாக்கெட்டும் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் சொக்கலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்த வடமாநிலத்தவர்களை தேடி வருகின்றனர்.