murder  
தமிழ்நாடு

“மது குடிக்க பணம் தரவில்லை..” பெற்ற தாயை உயிரோடு கொளுத்தியக் கொடூர மகன்!

மது போதைக்கு அடிமையான விக்டர் அரசு வேலையயும் விட்டு தற்போது வேலைக்கு செல்லாமல்...

மாலை முரசு செய்தி குழு

செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் கெங்கையம்மன் கோயில்  தெருவைச் சேர்ந்தவர் எஸ்தர்(65) இவரது மகன் விக்டர் ராஜேந்திரன்(45) .

விக்டர் ராஜேந்திரன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அரசு கூட்டுறவு  சர்க்கரை ஆலையில் அரசு ஊழியராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார்.

மனைவி மற்றும் பிள்ளைகள் ஆகியோர் ஆத்தூரில் வசித்து வரும் நிலையில் விக்டர் மட்டும் தனது தாயோடு செங்கல்பட்டில் இருந்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான விக்டர் அரசு வேலையயும் விட்டு தற்போது வேலைக்கு செல்லாமல்  தனது அம்மாவோடு தங்கிக்கொண்டு தினமும் குடிக்க காசு கேட்டு அம்மாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில்  சம்பவத்தன்று தனது தாயிடம் மது அருந்த  பணம் கேட்டுள்ளார்.

அவர் ‘பணம் இல்லை’ என கூறியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்டர் ராஜேந்திரன் தனது தாயை தாக்கி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தாய் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

எஸ்தரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 70 சதவீத தீக்காயத்துடன் எஸ்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு நகர போலீசார் விக்டர் ராஜேந்திரனை கைது செய்து தீவிர  விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். குடிக்கு அடிமையாகி குடிக்க பணம் தராததால் பெற்ற தாயையே எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.