தமிழ்நாடு

மன்னார்குடியில் பிரபல தையல் கடையில் தீ விபத்து.. ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மன்னார்குடியில் பிரபல தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து  நாசமாகின.

Malaimurasu Seithigal TV

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் சூரிய நாராயணன். இவர், பெரிய கடைத் தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக தையலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை திடீரென்று கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான காமராஜ், கடையின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.