தமிழ்நாடு

பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு...அமைச்சர் அளித்த பதில்!

Tamil Selvi Selvakumar

மரக்காணம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளசாராயம் குடித்து, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மரக்காணம் அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ வசதி இல்லாததால், முண்டியம்பாக்கம் வரை கொண்டுசெல்ல வேண்டிய நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மரக்காணம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.