தமிழ்நாடு

முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாரியப்பன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

Malaimurasu Seithigal TV

டோக்கியோ பாரலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தடகள வீரர் மாரியப்பன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். அப்போது வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் மாரியப்பன் கூறியதாவது, தமிழக முதல்-அமைச்சரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். முதல்-அமைச்சர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அரசுவேலை வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும்,  தமது கோரிக்கையை நிறைவேற்ற  முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும்  குறிப்பிட்டார்