தமிழ்நாடு

தமிழ் நாட்டில் மேக்சி விஷன் பல்நோக்கு கண் மருத்துவமனைகள்!!

Malaimurasu Seithigal TV

மேக்ஸி விஷன் பல்நோக்கு கண் மருத்துவமனை 400 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.

மாக்ஸி விஷன் பல்நோக்கு கண் மருத்துவமனைகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நூற்றுக்கணக்கில் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளில் 50 கண் மருத்துவமனைகளும் 100 கண் சிகிச்சை மையங்களும் அமைக்க உள்ளதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட உள்ளது.

இதன் மூலம் 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு  மற்றும் 200 கண் மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை நிறுவனம்  தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.