தமிழ்நாடு

மரம் சரிந்து பெண் உயிரிழந்த விபத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் தொடர்பில்லை - சென்னை மேயர்!

சென்னை கேகே.நகரில் மரம் சரிந்த விபத்திற்கும், மழைநீர் வடிகால் பணிகளுக்கும் தொடர்பில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

Tamil Selvi Selvakumar

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் தூய்மைக் கண்காட்சியை சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், கே.கே.நகரில் மரம் விழுந்து பெண் மரணமடைந்த விபத்திற்கும், மழைநீர் வடிகால் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். நான்கு நாட்களுக்கு முன்பே, அப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இரண்டு நாட்களாக பெய்த மழையால் மண் ஈரமானதன் காரணமாகவே மரம் சரிந்தது என்று தெரிவித்துள்ள அவர், தற்போது மாநகராட்சியின் தொடர் ஆய்வு காரணமாக பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், நகரில் உள்ள பழமையான மரங்கள் குறித்து ஆய்வு செய்யபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.