தமிழ்நாடு

MBBS, BDS படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்...!

Malaimurasu Seithigal TV

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வுக்குப் பிறகு, அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள  119 எம்பிபிஎஸ், 85 பிடிஎஸ் இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 648 எம்பிபிஎஸ், 818 பிடிஎஸ் இடங்களுக்குமான 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் அந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக தேர்வுக் குழு வெளியிட்டது. அதன்படி இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தகுதியானவர்கள், இன்று காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.