தமிழ்நாடு

மனிதக்கழிவை இயந்திரம் கொண்டு அகற்றும் முறை,.. தமிழகத்தில் அறிமுகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் .! 

Malaimurasu Seithigal TV

மனிதக்கழிவை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி அறிமுகப்படுத்தியுள்ளார்.  

மனிதக்கழிவுகளை இயந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, தனது முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொய்யாத்தோப்பு பகுதியில் இந்த எந்திர செயல்பாட்டை துவக்கி வைத்தோம்" என  உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.