தமிழ்நாடு

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு செயலாற்றிய 3 பேருக்கு பதக்கம் வழங்கிய முகஸ்டாலின்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய 3 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். 

Tamil Selvi Selvakumar

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதேபோல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கோவை, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு, பதக்கங்களையும், பாராட்டு பத்திரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.