தமிழ்நாடு

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம்...அமைச்சர் சொன்னது என்ன?

Tamil Selvi Selvakumar

வடகிழக்கு பருவ மழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்:

வடகிழக்கு பருவமழையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது:

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக, பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை, பொது தொலைபேசி எண் ஆகியவை வழங்கப்பட உள்ளதாகவும், நோய் தடுப்பு பணி, மின் பழுதை சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.