தமிழ்நாடு

ஜூலை 10-ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காசநோய் இல்லா தமிழகம்  என்ற நிலையை எட்ட, நாளை மறுதினம் நடமாடும் எக்ஸ்ரே வாகன சேவை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக, 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது, வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாநகர பேருந்தில் பயணித்தோர் உட்பட அனைவருக்கும் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், வரும் 10ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், காசநோய் இல்லா தமிழகம்  என்ற நிலையை எட்டுவதற்கு, நாளை மறுதினம் நடமாடும் எக்ஸ்ரே வாகன சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.