தமிழ்நாடு

வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் அரசு அலுவலகங்கள்...! செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!!

Tamil Selvi Selvakumar

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அரசு கட்டிடங்கள் மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் :

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், ரயில் நிலையங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், வருமானவரித் துறை அலுவலகம், ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 

இதனிடையே, காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவையொட்டி, சாலையில் இருபுறமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், சென்னையின் பிரதான சாலைகளில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கான அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் காந்தி சிலை முன்பு நடத்தப்படும். ஆனால், தற்போது, மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் உழைப்பாளர் சிலை அருகே நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான மூன்று நாள் ஒத்திகை அணி வகுப்பு உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.