சென்னையில் கனமழை காரணமாக மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலை மற்றும் கடை ஓரங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதன் காரணமாக வேலைக்கு சென்று வந்த பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மெட்ரோவில் கூட்டம் அலைமோதுகிறது.
இருசக்கர வாகனம், கார் மற்றும் பேருந்து ஆகியவை நீரில் மூழ்கியபடி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.