தமிழ்நாடு

பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை...!

Tamil Selvi Selvakumar

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

சிவகாசி ரெங்கபாளையம் கம்மாபட்டி மற்றும் மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, வெடி விபத்துக்களை தடுப்பது குறித்தும், பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும், பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.