2022 - 2023ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று கலந்தாய்வு நடைபெற்றது.
மாற்று திறனாளிகளுக்கு 212 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 82 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதி பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்ட 46 மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டு, தேர்வான 11 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டது.விளையாட்டு வீரர்கள் பிரிவில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டு தேர்வான 8 மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடந்து வருகிறது.
இந்தக் கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கான ஆணையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வழங்கினார்.
மேலும் படிக்க | நயன்- விக்கி ஜோடியின் குழந்தை விவகாரம்; இன்னும் நீங்க அத விடலையா? - செய்தியாளர்களிடம் கேட்ட அமைச்சர்!