பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் 20 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், அதன் பின் கோவை மாநகரின் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலுமாக சரி செய்யப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாநகராட்சியின் மொத்த குடிநீர் தேவை என்பது 304 MLD என்ற நிலையில் உள்ளதாகவும், தற்போது 40 MLD அளவுக்கு தட்டுப்பாடு உள்ளது என்றும், அடுத்த 20 நாளில் பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் துவங்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த திட்டம் துவங்கியதும் 178 MLD அளவிற்கு நீர் கிடைக்கும் என கூறிய அவர், இதன் மூலம் கோவை மாநகரின் குடிநீர் தேவை முற்றிலுமாக பூர்த்தி செய்யப்படும் எனவும், 24 மணி நேரமும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துளார்.