தமிழ்நாடு

மேடை ஏறும் போது தடுக்கி விழுந்த அமைச்சர் கே.என்.நேரு...பதறிய நிர்வாகிகள்!

Tamil Selvi Selvakumar

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மேடை ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

சேலம் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 

இந்த விளையாட்டுப் போட்டியின் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என் நேரு, மேடை ஏறும் போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதைப் பார்த்து பதறிய நிர்வாகிகள் உடனடியாக அவரை தூக்கிவிட்டு பாதுகாப்பாக மேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

இருப்பினும், அமைச்சர் ஒருவர் மேடை ஏறும் போது கீழே விழுந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.