தமிழ்நாடு

கடந்த நிதி ஆண்டு மொத்த வரி ஜனவரியில் முறியடிப்பு அமைச்சர் பெருமிதம்

Malaimurasu Seithigal TV

வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை.. அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

வணிகவரித்துறையில் கடந்த நிதி ஆண்டில் மொத்தம் ரூபாய் 1,04,970.08 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டது. தற்போது நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாத முடிவில் வணிகவரித்துறையின் வரிவருவாய் ரூபாய் 1,06,918 கோடி.
இவ்வகையில்  கடந்த நிதி ஆண்டின் மொத்த வரி வசூலை நடப்பு ஜனவரி மாத முடிவிலேயே கடந்து பத்திரப்பதிவு துறையைப் போலவே வணிகவரித்துறையும் சாதனை படைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.