உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது
சென்னை மெரினா கடற்கரையில்
உலக கல்லீரல் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "கல்லீரல் வடிவ" மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்லீரல் வடிவ மணற்சிற்பத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மணல் சிற்பத்தின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடை பேச்சு
கடந்த வருடம் மே மாதம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் முதல் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இங்கு கழகத்தின் சாதனை விளக்கும் வகையிலான மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இன்று உலக கல்லீரல் தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதுபோன்ற பல்வேறு மணல் சிற்பங்களை அமைத்துள்ளார்.அந்த வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவம் பொருந்திய மணல் சிற்பத்தையும் அவர் அமைத்துள்ளார்.
மேலும் படிக்க | மின்கட்டண உணர்வை ரத்து செய்யக்கோரி வரும் 20-ம் தேதி மாநிலம் முழுவதும்.... ஒருநாள் கதவடைப்பு போராட்டம்
பொதுமக்களிடையே கல்லீரல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது விழிப்புணர்வு போன்ற நிகழ்வை செய்து வரும் அப்போலோ மருத்துவமனையின் பணி
சிறப்பு வாய்ந்தது. நான் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதனால் இந்நிகழ்விற்கு என்னை அழைத்துள்ளீர்கள் ஆனால் இந்நிகழ்விற்கு பொருத்தமான சரியான நபர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சிறந்த முறையில் உடல் நலத்தை பேணி காப்பவர் அமைச்சர் மா சுப்பிரமணியன். எந்த நோக்கத்துக்காக இது உருவாக்கப்பட்டதோ அதன் விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும்.
இதனைத் தொடர்ந்து Live healthy for healthy liver என்னும் தலைப்பில் புத்தகத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இங்கு அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது