தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை நிறைவு...!

Tamil Selvi Selvakumar

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயக்கோளாறு ஏற்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சைக்கான தகுதி பெற்றதாக மருத்துவக்குழு தெரிவித்ததை அடுத்து, இன்று அதிகாலை மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி இருதயத்தில் அடைப்பு இருந்த 4 இடங்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதாகவும், அவர் தற்போது மயக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர் வீடு திரும்ப 15 நாட்கள் ஆகக்கூடும் எனவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.