தமிழ்நாடு

அமைச்சர் கைது: நீதிமன்றத்தை நாடிய அமைச்சரின் மனைவி!

Malaimurasu Seithigal TV

சென்னை: அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி நீதி மன்றத்தை நாடியுள்ளார். 

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  செய்யப்பட்டார். இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக, அவரது மனைவி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சென்னை உறைநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி. இந்த வழக்கை, நீதிபதிகள் எம். சுந்தர், சக்தி வேல் அமர்வில், பிற்பகலில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.