தமிழ்நாடு

சுதந்திர தின சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் உதயநிதி ...!

Malaimurasu Seithigal TV

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையின் 32 முக்கிய  திருக்கோயில்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெறெ்றது.

 அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கும் வகையில் சர்க்கரைப் பொங்கல் , சம்பார் ,வத்தல் குழம்புடன் சாதம் , மூன்று வகை பொறியல் , வடை , பாயாசம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. 

மேலும் சமத்துவ விருந்தில் பங்கேற்ற பிறகு பார்த்தசாரதி கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இலவச , வேட்டி சேலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.