Admin
தமிழ்நாடு

அரையாண்டு தேர்வு எழுத முடியாத பள்ளிகளுக்கு ஜனவரியில் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்

கனமழையால் பாதிக்கப்பட்டு அரையாண்டு தேர்வு எழுத முடியாத பள்ளிகளுக்கு ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Jeeva Bharathi

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம், முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும், மீதி உள்ள பள்ளிகளில் திட்டமிட்டபடி வரும் 9ம் தேதியிலிருந்து அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எந்தெந்த பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்கள் சேதமடைந்ததோ, அந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும், சான்றிதழ் வைக்கும் அறை, தலைமை ஆசிரியர் அறை தரைதளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.