தமிழ்நாடு

முதலமைச்சரின் நடவடிக்கைக்கு மியாட் மருத்துவமனை நன்றி

கொரோனாவின் இரடண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளுக்கு மியாட் மருத்துவமனை நன்றி தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனாவின் இரடண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளுக்கு மியாட் மருத்துவமனை நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட ஆக்சிஜன் மற்றும் கொரோனா படுக்கை தட்டுப்பாட்டை முதலமைச்சரின் ஆலோசனைப்படி தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டதால் தற்போது தொற்றின் வீரியம் குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மக்களுக்கும் உலக தரத்திலான ஆரோக்கியப் பராமரிப்பு கிடைப்பதை தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்  சாத்தியமாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு  திட்டம் மற்றும் மியாட்டின் சிறப்பான சிகிச்சையால் தீவிரமான கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதாக நாகராஜன் என்பவர் நெகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார்.