கடந்த ஆண்டு 2020 நவம்பரில் அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்த போது மீனவர்களுக்காக வாக்கி டாக்கி வாங்கியதில் தவறு நடந்திருப்பதாக மீன் வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் தெரிவித்த இந்த கருத்துக்காக அவர்மேல் அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சிவக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அண்ட் விசாரணையில் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் மு.க.ஸ்டாலின் ஏன் நேரில் ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் அந்த சம்மன்கள் ஸ்டாலினை சென்றடையாததால் அவர் ஆஜராகவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.