mkstalin 
தமிழ்நாடு

மோடி பாணியை அப்படியே பின்பற்றும் திமுக..! “மதன் கௌரி கூட லிஸ்ட்ல இருக்காருங்க..” - போட்டு உடைத்த மணி!!

மு.க.ஸ்டாலின் பிரதமரின் தேர்தல் யுக்திகளைத்தான் கைகொண்டுள்ளார் என்ற விமர்சனம் நெடுநாளாக ....

Saleth stephi graph

இன்னும் 8 மாதங்களில் தமிழ்நாடு வரலாறு காணாத முக்கிய மான  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணி அமைத்தல் கொடி பிடித்தல், கொள்கையை நிறுவுதல் என அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் நாம் இதுவரை பார்த்திராத தனித்துவமான தேர்தலாக இருக்கும் என்பதில் நிச்சயமா எந்த சந்தேகமும் இல்லை.

தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது.  இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஓரணியில் தமிழகம்.

இன்னொரு பக்கம் “மக்களை காப்போம் ..  தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தில்” அதிமுக பொதுச்செயலாளர் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்னரே இரண்டு பிரதான கட்சிகளும் இப்படி பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரிதினும் அரிது.

மு.க.ஸ்டாலின் பிரதமரின் தேர்தல் யுக்திகளைத்தான் கைகொண்டுள்ளார் என்ற விமர்சனம் நெடுநாளாக எழுந்து வருகிறது. அதற்கு காரணம் பிரதர் மோடிதான் தேர்தலுக்கு முன்பு ரோட் ஷோ செல்வார் தற்போது மு.க.ஸ்டாலினும் செல்கிறார், அதே போல ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது சேரி பகுதிகள் அனைத்தும் திரையிட்டு மறைக்கப்பட்டன, சமீபத்தில் முதல்வர் மதுரை செல்லும்போதும், கால்வாய்கள் திரையிட்டு மறைக்கப்பட்டன இப்படி பல விஷயங்கள் பிரதமர் பணியிலே முதல்வர் மு.க. ஸ்டாலினும் செய்வதாக பல விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் மணி “இந்தியாவிலே விளம்பரங்களுக்கு அதிக பணம் செலவு செய்த தலைவர் பிரதமர் மோடி தான்.  அதுவும் சுய விளம்பரங்களுக்கு.

நீங்கள் எந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றாலும், மோடியின் புகைப்படத்தை காணலாம். இன்று அதே பணியைத்தான் மு.க.ஸ்டாலினும் தொடர்கிறார். ரோட் ஷோ செல்கிறார், அதிலும் குறிப்பாக இன்ப்ளூயன்சர்கள் என்று சொல்லப்படும் சமூக ஊடக பிரபலங்களை தங்களை தங்கல் கட்சியை பிரபல படுத்த பயன்படுத்திக்கொள்கிறார். தற்போது கூட பிரபல யூடியூபரான மதன் கௌரி தமிழக அரசின் நலத்திட்டங்களை குறித்து விளம்பரப்படுத்தி வருகிறார். ஏற்கனவே திமுக -விற்கு என யூடியூப் சேனல், ஐடி விங் என பல விளம்பர மூலங்கள் இருந்தாலும்  தொடர்ந்து பிரபலமான யூடுபர்களை தங்களின் சொந்த விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறது” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.