தமிழ்நாடு

புதிய பேருந்து வழிதடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ!!!

உத்திரமேரூர் அருகே புதிய பேருந்து வழித் தடத்தை சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாம்பையம்பட்டு என்னும் இடத்தில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கவிழா நடைபெற்றது. எல் எண்டத்தூரில் இருந்து பம்பயம்பட்டு, வேடந்தாங்கல் வழியாக தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படும் இந்த பேருந்து வழித் தடத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.