தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து சமீபத்தில் சில சர்ச்சைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சரின் லண்டன் பயணத்தில் கீர்த்தனா அழைத்துச் செல்லப்படாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீர்த்தனா குறித்து வெளியிட்டுள்ள பதிவு கவனத்தைப் பெற்றுள்ளது. அதில், கீர்த்தனா சமீபத்தில் கடந்து வந்த கடினமான சூழல் குறித்து கனிமொழி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அவரது பதிவில், “ஒரு பெண்ணாக இதை நான் பேசியே ஆக வேண்டும். ஏனென்றால், இதை நானே நேரில் பார்த்தேன்.
என் தங்கை கீர்த்தனாவை, அவரது கழுத்தெலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு காமாட்சி மருத்துவமனையில் சென்று பார்த்தேன். மருத்துவர்கள் அவரை 20 நாட்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருந்தனர். ஆனால், மாநிலத்தின் மீதுள்ள அக்கறையால் 4 நாட்களில் பணிக்குத் திரும்பினார்.”
அவர் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்தை ஒருங்கிணைத்து வந்தார். ஒவ்வொரு நாளும் அவரது முதல் கேள்வி, அவரது வலியைப் பற்றியோ, மாத்திரைகளைப் பற்றியோ அல்ல; ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு ஏற்பாடும் சரியான நேரத்தில் நடந்ததா என்பதுதான். நான் அவரிடம் நிதானமாக இருக்கச் சொன்னேன், ஆனால் அவர் கேட்கவில்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சார், கீர்த்தனாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய உடனே, எதிர்க்கட்சி வட்டாரம் என்ன பிரச்சனை என்று கேட்கவும், அவர் சரியானாரா என்று கேட்கவும், அவர் என்ன சிக்கலைக் கடந்து வந்தார் என்று கேட்கவும் தயாராக இல்லை. அவர்களது எண்ணம் நேராக ஒரு காரணத்தை நோக்கிச் சென்றது: மாதவிடாய்.
பெண்கள் விடுபட்டால் அதற்கு ஒரு காரணம்தான் இருக்கும் என நினைக்கும் இந்த எதிர்வினை, அவரைப் (கீர்த்தனாவைப்) பற்றி எதுவும் சொல்லவில்லை; உங்கள் பிற்போக்கு மனங்களைப் பற்றி எல்லாமும் சொல்கிறது.
பெண்கள் அவர்கள் சூழ்நிலையால் வரையறுக்கப்படுவதில்லை. நாங்கள் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தாய்மார்கள், மகள்கள்; நோயையும், காயங்களையும், கடமையையும் ஒரே நேரத்தில் சுமந்தும் நிற்கிறோம். ஒரு பெண்ணின் உழைப்பில் குறை காண முடியாதபோது, அவளது உடலைத் தாக்கும் ஒரு பழைய பழக்கமே, அவளது விளக்க முடியாத ஒவ்வொரு நாளையும் அவளது உயிரியலுக்குள் சுருக்கிவிடுவதாகும்.
நான்கு நாட்கள் கழித்தும் இப்போதும் நலமாகிக் கொண்டிருக்கிறார். வலி மருந்துகளை எடுத்துக்கொண்டு, பேண்டேஜ் அணிந்துகொண்டு, ஒன்றன்பின் ஒன்றாக, இடைவெளி இல்லாமல் சந்திப்புகளை மேற்கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்தப் பிற்போக்கு மனநிலை மாற வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து தலைமை தாங்கும் பெண்களை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, அவர்களின் சுழற்சிகளைப் பற்றி விவாதிக்கக் கூடாது.
பெண்கள் இதைவிடச் சிறப்பானதற்குத் தகுதியானவர்கள்; தமிழ்நாடு இதைவிடச் சிறப்பானதற்குத் தகுதியானது.
மன்னியுங்கள் கீர்த்தனா, இதை நீங்கள் தனிப்பட்டதாக வைத்திருக்க நினைத்தீர்கள். ஆனாலும், நான் பதிவிட வேண்டியதாகிவிட்டது." எனப் பதிவிட்டுள்ளார்.
நேற்றையதினம் தமிழ்நாடு அரசு மற்றும் ஸ்டாரபாக்ஸ் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, அமைச்சர் கீர்த்தனா உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்