தமிழ்நாடு

பேனா நினைவுச் சின்னத்தின் மாதிரி படம் - திமுக அரசை தும்சம் செய்த சீமான்

Malaimurasu Seithigal TV

கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடல் அலை வடிவத்தில் பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டு கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுகிறது.

கடலுக்குள் ஏன் பேனா சின்னம் : சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது  பேனா நினைவு சின்னத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டதை தொடர்பாக கேள்வி கேட்க பட்டது.  அதற்கு பதில் கூறும்போது  எதற்காக பேனா சின்னம்?  ”எழுதாத பேனாவை வைப்பது பகுத்தறிவு  எழுதுகின்ற பேனாவை பூஜை அறையில் வைத்து கும்பிட்டால் அது முடப்பழக்கமா”?

அப்படி என்றால்  எல்லாருக்கும் சிலையும் நினைவிடம்  வைக்கமுடியுமா ?  சமாதி அதிகம் ஆகிட்டேதானே போகும்  அப்படி பார்த்தால்  வேலுநாச்சியார், வ.உ.சி, கக்கன் , காமராஜர் போன்றவர்களுக்கு ஏன் சிலை அமைக்கப்படவில்லை.  அவர்களை விடவா கலைஞர் செய்துவிட்டார்?   பள்ளிகூடம் கட்ட காசு இல்ல கடன் வாங்கி கட்டுறீங்க. பேனா வேண்டாம் என்னை கருத்து கேட்பு கூட்டத்திற்கு கூப்பிட்டால் கூட்டத்திற்கு சென்றுவிட்டு எதிர்ப்பு தான் தெரிவிப்பேன் எனவும் தெரிவித்தார்.