தமிழ்நாடு

"எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன" மோடி குற்றச்சாட்டு!

Malaimurasu Seithigal TV

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகள் காவிரி நீருக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ராஜஸ்தானின் சித்தோர்கரில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாகனத்தில் சென்ற பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பேரணிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் ராஜஸ்தானை அழித்து விட்டதாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் மாநிலத்தை அழித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஊழல்வாதி, குண்டர்கள், கலவரக்காரர்கள் என அனைவரும் ராஜஸ்தான் அரசின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் மாநிலத்தை சூறையாடுவதை மட்டுமே காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டதாகவும் அவர் கூறினார். 

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகள் காவிரி நீருக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன எனக் கூறிய அவர், காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டினார். குஜராத் முதலமைச்சராக, தான் இருந்தபோது நீதிமன்றத் தலையீடு இன்றி ராஜஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.