தமிழ்நாடு

மகள் காதலனுடன் சென்றதால் தாய் தந்தை தற்கொலை

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கீழ வல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (47), இவரது மனைவி சங்கரம்மாள் (41). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிகாம் முடித்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது மகள், தான் காதலித்து வந்த  ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காளிமுத்து லாரி டிரைவரான இவருடன் சென்றுவிட்டாராம். 

இதில் மனவேதனையடைந்த சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலையில் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விஷம் வாங்கி வைத்துக்கொண்டு பெருங்குளம் அருகில் ஒரு கார்டனில் விஷம் குடித்து கிடந்துள்ளார். 

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சாய்ராம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாயர்புரம் காவல் நிலைய போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.