எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 
தமிழ்நாடு

"அமைச்சா்கள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம்

22025-26-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைத்துறை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் திருவள்ளூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற போது விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்ற சர்ச்சை..

Anbarasan

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் 2025-26-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைத்துறை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் எனவும்,பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது நிகழ்ச்சி தொடங்கும் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

பின்னர் விவசாயிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கலந்துரையாடி, விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த ஆட்சியில் போராடாமலே அரசு விவசாயிகளுக்கு கொடுப்பதாகவும்,  கடந்த 4 ஆண்டுகளில் 37 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது எனவும், கரும்பு விவசாயம், இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள்  தெரிவித்ததாகவும், மா விவசாயிகளுக்கு இந்தாண்டு  இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்காததால் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதாகவும்,மத்திய அரசு நிதி தராததால் மாணவர்களே சொந்த பணம் வழங்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு சொல்லும் பொய்களை இனி தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என விஜய் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவர் சொல்லுவார் என தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது குறித்து கேட்ட போது திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் எழுந்து, ஆய்வு கூட்டம் என அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கூற, அவர் இது ஆய்வுக்கூட்டம் என தெரிவித்து எழுந்து சென்றனர்