தமிழ்நாடு

நீர்மட்டம் அதிகரிக்கும் அணைகள்... மழையால் தொடரும் எச்சரிக்கைகள்...

தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தேனி : குமுளி அருகே உள்ள  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி, 2 ஆயிரத்து 274 கன அடியாகவும், மொத்த நீர் இருப்பு 6 ஆயிரத்து 181 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதனையடுத்து மேலும் கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியுள்ளது. முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. தற்போது அங்கு பெய்து வரும் பரவலான மழையால் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியுள்ளது.

மேலும், நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாகவும் உள்ளது. இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. லும் அணையின் அடிப்பகுதியில் உள்ள 15 அடி சேற்றை கழித்துவிட்டு அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.