சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி பிராமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தலைமை பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு, சென்னை நீதிமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.