தமிழ்நாடு

"சென்னை மாநகராட்சியின் நிலுவை மின் கட்டணம் ரூ 100 கோடி": 20 மாதத்திற்குள் செலுத்த உத்தரவு!

Malaimurasu Seithigal TV

சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ள 100 கோடி ரூபாய் மின் கட்டணத்தை, 20 மாதங்களுக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 100 கோடி ரூபாய் மின் கட்டணத் தொகையை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செலுத்துமாறும், உள்ளாட்சி அமைப்புள் வைத்திருக்கும் பழைய நிலுவைத் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் மின்வாரியம்  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாதம் 5 கோடி ரூபாய் வீதம் 20 மாதங்களுக்குள்ளாக ரூ 100 கோடியை செலுத்த சென்னை மாநகராட்சிக்கு, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

அது போல, உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் நிலுவை வைத்திருக்கும் மின் கட்டணம் குறித்து கண்காணிக்கவும், வசூலிக்கவும் அனைத்து விவரங்கள் அடங்கிய தகவல் பலகை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக இருக்கும் பயனற்ற மின் இணைப்புகள் மற்றும் தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும், அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.