தமிழ்நாடு

கழகம் தான் உங்கள் சாதி... தொண்டர்கள் தான் உங்கள் சனம்...

முரசொலியில் வெளியான கட்டுரை ஒன்றில், திமுக கழகம் தான் உங்கள் சாதி... தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆளுங்கட்சியான் திமுகவின் குரலாக இருக்கும் கட்சியின் அதிகாரப்புயுர்வ நாளேடு முரசொலியில், இன்று ஒர் பெரிய கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், சாதி சனம் பேசும் மக்களுக்கு குறிப்பிட்டது போல இந்த கட்டுரை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது அதிகம்:

திமுக எனும் பேரியக்கத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்க இருக்கும் படை தளகர்த்தகர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களில் பலர் முன்பே பொறுப்பில் இருந்தவர்களாக இருக்கலாம். இன்னும் பலர் பொறுப்புக்கு புதியவர்களாக இருக்கலாம். ஏற்கனவே இருந்தவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்க பட்டவர்களும் எதிர்கொள்ள வேண்டிய காலம் சோதனைகள் நிறைந்தவை என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள்.

நம்மை போல தோல்வி அடைந்தவர்கள் இல்லை...

நம் இயக்கத்தை போன்று பெரும் வெற்றி பெற்ற இயக்கமும் இல்லை அதல பாதாள தோல்வியை சந்தித்த இயக்கமும் இல்லை என்று கழகத் தலைவர் பல மேடைகளில் பேசியிருக்கிறார்.

நமது இயக்கம்  இடுப்பொடித்த தோல்விகளையும் மிடுக்கோடு எதிர்கொண்டு எழுந்து நின்றுள்ளது. இது தனிமனித செல்வாக்கின் துணை கொண்டு வளர்ந்த இயக்கமல்ல. தனித்துவமிக்க இதன் கொள்கைகளே இதனது வலிவு .

சாதி இல்லை உங்களுக்கு....

இனி உங்களுக்கு என எந்த சாதி அடையாளமும் இருக்கக் கூடாது. திமுக கழகம் தான் உங்கள் சாதி, கழகத் தொண்டர்கள் தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும். இதனை மனதில் நிறுத்துங்கள் பொறுப்பேற்க இருக்கும் ஒவ்வொருவரும் மனதில் பதிய வைக்க வேண்டியது எந்த தனி மனிதனின் செல்வாக்கிலும் திமுக வளர்ந்த இயக்கமல்ல. இதனை துவங்கியவர்கள் மிக மிக சாமானியர்கள் அவர்களிடம் இருந்த ஒரே பலம் இலட்சிய பலம் தான் என்று வெளி வந்துள்ளது.

இப்படி தான் இந்த கட்டுரை முடிகிறது.