பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர் எனவும் அவர் செல்வது நடைபயணம் இல்லை வாகன பயணம் எனவும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டக்குழுவின் சார்பில் நிதியளிப்புப் பேரவைக் கூட்டம் நடத்தபட்டுள்ளது.
அப்பொழுது பேசிய மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், "பா.ஜ.க வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஒரு அணியில் உள்ளன. 2024 ல் கலவரம் மூலமாக தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க தயாராகி வருகிறது. உலகம் முழுவதும் சுற்றும் மோடி மணிப்பூர் செல்ல தயங்குகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், " பாஜக கலவரத்தின் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயல்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு நாடாக இருக்காது. சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்" எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர் என்றும் அவர் செல்வது நடைபயணம் இல்லை, வாகன பயணம் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், விலைவாசி உயர்வு , வேலையின்மை உள்ளிட்டவற்றை கண்டித்து செப்டம்பர் 13 , 14 ,15 ம் தேதிகளில் மத்திய அலுவலங்களின் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க || புத்துயிர் பெரும் திருத்தணி ரயில் நிலையம்... காணொளி வாயிலாக பணிகளை தொடங்கி வைத்த பிரதமர்!!