தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்மநபர்கள்...வீடியோ வைரல்...

சென்னை பாடி பகுதியில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை  திருடும்  சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது 

Malaimurasu Seithigal TV

சென்னை பாடி அடுத்த மகாலட்சுமி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார். இவர் கடந்த 19-ஆம் தேதி இரவு தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள பைக் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் விசாரணை மேற்க்கொண்ட போலீசார், திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சி பதிவுகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.