தமிழ்நாடு

BSNL இணைப்பகத்தை திருடிய மர்ம நபர்கள் கைது..! வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டதாக தகவல்...!

பிஎஸ்என்எல் (BSNL) இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி, வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

பிஎஸ்என்எல் (BSNL) இனைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி, தனியார் சேட்டிலைட் போன் உதவியுடன் சிலர் தொலைபேசி இனைப்பகம் நடத்தி வருவதாக டெல்லியில் உள்ள மத்திய உளவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் விசாரனையில் ஈடுபட்டனர். அதில், ஆண்டிபட்டியில் உள்ள பாப்பாம்மாள்புரம் மற்றும் தேனி காவல் நிலையம் அருகில் உள்ள பழைய தாலுகா அலுவலகம் பகுதியில் உள்ள வீட்டில் அதிகாரிகள் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது இருவர் கைது செய்யபட்டனர். மேலும் அதிகாரிகள் சோதனை நடத்துவது தெரிந்து 3 பேர் தப்பியோடி உள்ளனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் முகமது ஆசிப் மற்றும்  சஞ்ஜிர் முகமது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கடந்த 3 மாதங்களாக தேனி மற்றும் ஆண்டிபட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2200 சிம் கார்டுகள் மற்றும் 35 சேட்டிலைட் ரீசிவர்கள் பறிமுதல் செய்யபட்டன. 

இவர்கள் வெளிநாட்டு தீவிரவாத குழுக்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா, ஆன்லைன் மோசடி செயலுக்காக இந்த மோசடியில் ஈடுபட்டார்களா அல்லது பிஎஸ்என்எல் (BSNL) தொழில் நுட்பங்களை வெளிநாட்டுகளுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தினார்களா என்ற கோணத்தில் மத்திய உளவுதுறை அதிகாரிகள் விசாரனை நடத்தினர்.  பின்பு, தேனி காவல்துறையினர் இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.