தமிழ்நாடு

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்தின் சோதனை ஓட்டம்...!

Tamil Selvi Selvakumar

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், அதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து வருகின்ற 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் பயணிகள் இல்லாமல் 14 ஊழியர்களுடன் அதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.

மூன்று மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் கப்பல் மீண்டும் இன்று மாலை நாகை துறைமுகத்திற்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கைக்கு செல்ல ஒரு நபருக்கு ஏழாயிரத்து 670 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்வதற்கு 10 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.