நடிகர் ரஜினிகாந்த் உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ரஜினிகாந்துடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பிற்கு பின் X தளத்தில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் ‘இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் திரு. ரஜினிகாந்த் அவர்களை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான திரு. அரவிந்த் மேனன் அவர்கள் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக (National Secretary) பதவி வகித்து வருகிறார், மேலும் தமிழக தேர்தல் வியூக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சந்திப்பில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி சிறப்பித்ததாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கராத்தே தியகராஜன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் திரு.பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.