Nainar Nagendran mobile missing news 
தமிழ்நாடு

பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பரபரப்பு - நயினார் நாகேந்திரனின் செல்போன் காணாமல் போய், பின்னர் மீட்டல்

தூத்துக்குடியில் தனியார் டிஎஸ்எப் ஹோட்டலில் வைத்து மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் செல்போன் காணாமல் போன சம்பவத்தால் பரபரப்பு.

Anbarasan

தூத்துக்குடி டிஎஸ்எப் ஹோட்டலில் வைத்து இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டம் முடிந்த பின்பு வெளியே உணவருந்த சென்ற திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது செல்போனை தேடினார்.

அப்போது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் நயினார் நாகேந்திரன் உதவியாளர்கள் செல்போனை சிறிது நேரம் தேடினர்

இதையடுத்து செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் ரிங் சென்ற நிலையில் சைலண்டாக இருந்ததால் யாரும் எடுத்துச் சென்றார்களா என கட்சி தொண்டர்கள் பேசிக் கொண்டிருந்தனர் சிசிடிவி கேமரா மூலம் செல்போன் எடுத்தவர்களை கண்டுபிடித்து விடலாம் என கூறிக் கொண்டிருந்தனர்

இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் செல்போன் சுமார் 10 நிமிட தேடலுக்கு பின் வேறு ஒருவரின் செல் என நினைத்து ஒரு நபர் எடுத்து கையில் வைத்திருந்த நிலையில் தொடர்ந்து அந்த செல்போனுக்கு ஃபோன் வந்ததைத் தொடர்ந்தும் செல்போன் காணாமல் போய் தேடுவதை அறிந்த அந்த நபர் நயினார் நாகேந்திரனின் செல்போனை ஒப்படைத்தார்

இதைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர் இதன் காரணமாக கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது