தமிழ்நாடு

விக்கி - நயன் இரட்டை குழந்தை விவகாரம்: மருத்துவமனை கண்டுபிடிப்பு!

Tamil Selvi Selvakumar

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தை பெற்ற மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி இரட்டை குழந்தை பெற்ற மருத்துவமனை கண்டறியப்பட்டுள்ளதாகவும்,இந்த  விவகாரம் தொடர்பாக இணை இயக்குனர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தக் குழுவில் குழந்தை மருத்துவர்கள் இருவர் நியமிக்கபட்டுள்ளதாக கூறிய அவர், தேவைப்பட்டால் நயன்தாரா விக்னேஷ்வரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.  மேலும், விதியை மீறியவர்கள் யார் என்பதை ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.